'காலா' இசை வெளியீடு நடைபெறும் இடம் அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,May 04 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா திரைப்படத்தின் இசை வெளியீடு வரும் 9ஆம் தேதி நடைபெறும் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது டுவிட்டரில் அறிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த இசை வெளியீட்டு விழா நடைபெறும் இடம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 'காலா' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இந்த இசை வெளியீட்டு விழா முன்னணி சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இன்று இரவு சென்னை திரும்பும் ரஜினிகாந்த், 'காலா' இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வார் என்றும், அன்றைய தினம் அவர் அனல் பறக்கும் அரசியல் குறித்து சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார் என்றும் கூறப்படுகிறது

More News

நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு குவியும் உதவிக்கரம்

தமிழக மாணவர்களை அலைக்கழிக்க வேண்டும் என்பதற்காகவே ராஜஸ்தான் உள்பட வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதும் மையங்களை சி.பி.எஸ்.இ. அமைத்து பழிவாங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒயின்ஷாப் வைக்க இடமிருக்கு, நீட் தேர்வு எழுத இடமில்லையா? பிரபல இயக்குனர் ஆவேசம்

இந்தியாவிலேயே தமிழக மாணவர்கள் சிலருக்கு மட்டும் வெளிமாநிலங்களில் அதுவும் ராஜஸ்தான் போன்ற தொலைதூர மாநிலங்களில் நீட் தேர்வு மையத்தை சி.பிஎஸ்.இ. அமைத்துள்ளது

ரயில் கழிவறை நீரை டீயில் கலந்த விவகாரம்: ரயில்வே நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை

ரயில் கழிப்பறையில் உள்ள தண்ணீரை தேநீர் தயாரிக்க எடுத்த டீ விற்பனையாளர் வீடியோ ஒன்று கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது

நீட்டிற்காக செல்லும் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ராஜஸ்தான் தமிழ் சங்கம்

மருத்துவ படிப்பு படிக்கவிருக்கும் மாணவர்களுக்கான நீட் தேர்வு வரும் 6ஆம் தேதி இந்தியா முழுவதும் நடைபெறவுள்ளது.

அஜித்துக்கு கிடைத்த பெருமைக்குரிய பதவி

தல அஜித் நடிப்பு மட்டுமின்றி மோட்டார் சைக்கிள் ரேஸ், கார் ரேஸ் உள்பட பல விஷயங்களில் ஆர்வம் காட்டுபவர் என்பது தெரிந்ததே.