'காலா' நடிகைக்கு காதல் திருமணம்! ரஜினியிடம் ஆசி வாங்க திட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்தில் ரஜினியின் முத்த மருமகளாக நடித்தவர் சிங்கப்பூர் சுகன்யா. தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்டம்தான் சுகன்யாவுக்கு பூர்வீகம் என்றாலும் சிங்கப்பூரில் வளர்ந்தவர்
இந்த நிலையில் சுகன்யா தனது கல்லூரி நண்பர் விக்ரமை திருமணம் செய்து கொள்ளவிருக்கின்றார். வரும் 14ஆம் தேதி சிங்கப்பூரில் திருமணமும், 22ஆம் தேதி திண்டுக்கல்லில் வரவேற்பும் நடைபெறவுள்ளது.
சென்னையில் கல்லூரியில் படிக்கும்போதே விக்ரம் தனக்கு நல்ல அறிமுகம் என்றும் அதன் பின்னர் இருவரும் அமெரிக்காவில் சந்தித்தபோது காதல் ஏற்பட்டதாகவும் கூறிய சுகன்யா, இருவீட்டார்களின் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார். திருமணம் குறித்து ரஜினியின் தகவல் தெரிவித்துவிட்டதாகவும், அவர் தற்போது வட இந்தியாவில் படப்பிடிப்பில் இருப்பதால் அவர் சென்னை திரும்பிய பின்னர் அவரிடம் ஆசிபெற திட்டமிட்டுள்ளதாகவும் சுகன்யா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com