'காலா' நடிகைக்கு காதல் திருமணம்! ரஜினியிடம் ஆசி வாங்க திட்டம்

  • IndiaGlitz, [Saturday,July 07 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்தில் ரஜினியின் முத்த மருமகளாக நடித்தவர் சிங்கப்பூர் சுகன்யா. தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்டம்தான் சுகன்யாவுக்கு பூர்வீகம் என்றாலும் சிங்கப்பூரில் வளர்ந்தவர்

இந்த நிலையில் சுகன்யா தனது கல்லூரி நண்பர் விக்ரமை திருமணம் செய்து கொள்ளவிருக்கின்றார். வரும் 14ஆம் தேதி சிங்கப்பூரில் திருமணமும், 22ஆம் தேதி திண்டுக்கல்லில் வரவேற்பும் நடைபெறவுள்ளது.

சென்னையில் கல்லூரியில் படிக்கும்போதே விக்ரம் தனக்கு நல்ல அறிமுகம் என்றும் அதன் பின்னர் இருவரும் அமெரிக்காவில் சந்தித்தபோது காதல் ஏற்பட்டதாகவும் கூறிய சுகன்யா, இருவீட்டார்களின் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார். திருமணம் குறித்து ரஜினியின் தகவல் தெரிவித்துவிட்டதாகவும், அவர் தற்போது வட இந்தியாவில் படப்பிடிப்பில் இருப்பதால் அவர் சென்னை திரும்பிய பின்னர் அவரிடம் ஆசிபெற திட்டமிட்டுள்ளதாகவும் சுகன்யா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.    

More News

கல்லூரி பேராசிரியரை சரமாரியாக கன்னத்தில் அடித்த நடிகை

கல்லூரி பேராசிரியர் ஒருவரை தொலைக்காட்சி நடிகை ஒருவர் சரமாரியாக கன்னத்தில் அடித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' டிரைலர் விமர்சனம்

கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படமான 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் நான் நடிக்கவில்லை, வாழ்ந்து இருக்கின்றேன்: சன்னிலியோன்

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'கரண்ஜித் கவுர்' என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

நோட்டீஸ் எதிரொலி: 'சர்கார்' படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு

தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த மாதம் 21ஆம் தேதி வெளிவந்தது. இந்த போஸ்டரில் விஜய் சிகரெட் புகைப்பது போன்ற போஸில் இருந்தார்.

பாரதிராஜா மகன் மீது திடீர் வழக்குப்பதிவு: காரணம் என்ன தெரியுமா?

இயக்குனர் இமயம் பாரதிராஜா மீது தமிழக காவல்துறை பல்வேறு வழக்குகள் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. அவரும் ஒருசில வழக்குகளில் முன் ஜாமீன் பெற்று வழக்கை சந்தித்து வருகிறார்.