close
Choose your channels

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தை இயக்குபவர் இவர் தான்: விரைவில் படப்பிடிப்பு!

Tuesday, September 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ’லாபம்’ மற்றும் ’துக்ளக் தர்பார்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் கடந்த வாரம் வெளியான நிலையில் இந்த வாரம் ’அனபெல்லா சேதுபதி’ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் அவர் தற்போது பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இதில் ஒரு சில படங்கள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் மேலும் ஒரு படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் மணிகண்டன் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே தேசிய விருது பெற்ற ’காக்கா முட்டை’ மற்றும் விஜய் சேதுபதி நடித்த ’ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

’ஆண்டவன் கட்டளை’ படத்திற்கு பின்னர் மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணையும் மணிகண்டன், இந்த படத்தை ஒரு அதிரடி கிராமப்புற ஆக்ஷன் படமாக உருவாக்க முடிவு செய்துள்ளதாகவும் இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் முதல் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment