ஹரிஷ் கல்யாணை அடுத்து லூஸ்லியாவுக்கு ஆதரவு தரும் இன்னொரு பிக்பாஸ் பிரபலம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஹரிஷ் கல்யாண் நடித்த 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' பட பாடலை நேற்று லூஸ்லியா பாடியதை அடுத்து நடிகரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான ஹரிஷ் கல்யாண், லூஸ்லியா குறித்து பெருமையாக தனது டுவிட்டரில் பதிவு செய்ததை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இன்னொரு பிக்பாஸ் பிரபலத்திடம் இருந்து லூஸ்லியாவுக்கு தற்போது பாராட்டு கிடைத்துள்ளது.
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான காஜல் பசுபதி, லூஸ்லியா குறித்து தனத் சமூக வலைத்தள பக்கத்தில் கூறியபோது, 'லூஸ்லியாவுக்கு ஆர்மி அமைத்து அவரை பிரபலமாக்க ஒரு ஐடி குரூப் வேலை செய்கிறதா? என்பது குறித்து எனக்கு தெரியாது. ஆனால் என்னை பொருத்தவரையில் தன்னை முன்னிலைப்படுத்த அவர் எந்த முயற்சியையும் எடுத்து கொள்ளவில்லை. அவரிடம் நடிப்பு இல்லை என்பது மட்டும் உண்மை. அவர் ஒரு நல்ல பெண் என்று சர்டிபிகேட் கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இதேபோல் தான் ஆரம்பத்தில் அமைதியாக இருந்து பின்னர் அனைவர் மனங்களையும் வென்ற ரித்விகா சாம்பியன் பட்டம் வென்றார். அதேபோல் இந்த முறை அமைதியாக, நடிப்பின்றி இயல்பாக இருந்து வரும் லூஸ்லியா சாம்பியன் பட்டத்தை பெறுவார் என்றே பலர் கணித்து வருகின்றனர்.
??I don't know. But I kinda like her. She ain't trying to do anything to gain attention. No drama. Looks like a good gal https://t.co/XXnsC89CG1
— Kaajal Pasupathi (@kaajalActress) June 27, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments