ரசிகர்களுக்கு உத்தரவாதம் கொடுக்கும் 'நித்யா நந்தா' படக்குழுவினர்

  • IndiaGlitz, [Monday,September 17 2018]

'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படத்தின் வெற்றி கூட்டணியான ஜிவி பிரகாஷ்-ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி மீண்டும் 'காதலை தேடி நித்யா நந்தா' என்ற படத்தின் மூலம் இணைகிறது என்பதையும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படம் ஒரு ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என்று இந்த படத்தின் குழுவினர் ரசிகர்களுக்கு ஒரு உத்தரவாதத்தை அளித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் நாயகன், நாயகியின் பெயர் நித்யா மற்றும் நந்தா என்பதையே இந்த படத்தின் தலைப்பு குறிப்பிடுகிறது. காதலை தேடி பாரெங்கும் தேடும் ஒரு இளம் ஜோடியின் கதைதான் காதலை தேடி நித்யா நந்தா . வித்தியாசமான கதை களங்களை தேர்ந்து எடுக்கும் ஜி வி பிரகாஷ் இந்த படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்குக்ம் இந்த படத்தின் தொடர் அறிவிப்புகள் விரைவில் வெளிவரவுள்ளதாம்

அபினந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில், லால்குடி இளையராஜா கலை அமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ஜி வி பிரகாஷ் கதாநாயகன், இசை அமைப்பாளர் என்ற இரட்டை பொறுப்புகளை மேற்கொண்டு உள்ளார். விஷன் மீடியா சார்பில் தினேஷ் கார்த்திக் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.