close
Choose your channels

முதல்வருக்கு டுவிட் போட்ட விஜய்சேதுபதி பட இயக்குனர்: உடனடியாக கிடைத்த ஆக்சிஜன் பெட்!

Monday, May 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் சேதுபதி நடித்த சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் ஒருவர் மதுரை அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாமல் அவதிப்படுவதாக டுவிட் ஒன்றை பதிவு செய்தை அடுத்து உடனடியாக அவருக்கு படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடித்த திரைப்படம் க/பெ ரணசிங்கம். இந்த படத்தின் இயக்குனர் விருமாண்டி நேற்று முன்தினம் தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்தார். அதில் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் இருக்கிறேன் என்றும், இங்கே சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுக்கை இல்லாமல் இருக்கிறோம் என்றும், உதவி பண்ணுங்க ஐயா என்று கோரிக்கை விடுத்து அந்த டுவிட்டை முதல்வர் ஸ்டாலின் அவர்களின் டுவிட்டர் பக்கத்திற்கு டேக் செய்தார்.

இதனையடுத்து அவருக்கு ஆக்சிஜனும் கூடிய படுக்கை ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிகிறது. இது குறித்து அவர் மறுநாள் ட்விட்டரில் ’முதல்வர் ஐயா அவர்களுக்கு நன்றி. நேற்று இரவு ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை ஏற்பாடு செய்து தரப்பட்டது. மதுரை அரசு மருத்துவமனைக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment