'க/பெ ரணசிங்கம்' இயக்குனரின் அடுத்த படம்.. ஹீரோ இந்த பிரபலம் தான்..!

  • IndiaGlitz, [Friday,February 17 2023]

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ’க/பெ ரணசிங்கம்’ என்ற படத்தின் இயக்குனர் விருமாண்டி இயக்கும் அடுத்த பட அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ’க/பெ ரணசிங்கம்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்திலும் நடித்திருந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்தது.

வெளிநாட்டில் இறந்த தனது கணவரின் உடலை சொந்த நாட்டிற்கு கொண்டு வர ஐஸ்வர்யா ராஜேஷ் நடத்திய போராட்டம் குறித்த கதை அம்சம் கொண்ட இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’க/பெ ரணசிங்கம்’ பட இயக்குனர் விருமாண்டி அடுத்த படத்தின் பூஜை தற்போது நடந்துள்ளது. இந்த படத்தில் நடிகர் விமல் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிப்பது குறிப்பிடும் நடிகர் விமல் கூறிய போது ’நம் மண்ணின் கலைஞன் /பெ ரணசிங்கம்’ இயக்குனர் அன்பு பங்காளி விருமாண்டி அவர்களோடு பணிபுரிய போவது மட்டற்ற மகிழ்ச்சி’ என்று தெரிவித்துள்ளார்.