அஜீத்தின் 'காதல் கோட்டை' பாணியில் 'ககக போ' திரைப்படம்?

  • IndiaGlitz, [Friday,September 11 2015]

இயக்குனர் பி.எஸ்.விஜய் என்பவர் இயக்கி வரும் 'ககக போ' என்ற படத்தில் சாக்ஷி அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் சாக்ஷி அகர்வால், ஜான்சி ராணி, கிளியோபட்ரா உள்பட ஒன்பது வித்தியாசமான கெட்டப்புகளில் தோன்றுகிறார். இந்த பாடல் மலேசியா, பாண்டிச்சேரி, ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டி உள்பட பல இடங்களில் படமாக்கபட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்புடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. கிளைமாக்ஸில் சாக்ஷி அகர்வால் வில்லனுடன் ஆக்ரோஷமாக மோதும் சண்டைக்காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் நடந்த இந்த சண்டைக்காட்சிகளில் சாக்ஷி அகர்வால் தைரியமாக டூப் இன்றி நடித்த்தாக படக்குழுவினர் பாராட்டியுள்ளனர்.

மேலும் இந்த படத்தில் அஜீத்தின் 'காதல் கோட்டை' படம் போல, கிளைமாக்ஸில்தான் ஹீரோவை சாக்ஷி அகர்வால் சந்திக்கின்றாராம். கிளைமாக்ஸ் வரை அவர்கள் ஏன் சந்திக்கவில்லை, அதுவரை அவர்களின் தொடர்பு எப்படி இருந்தது என்பதைத்தான் நகைச்சுவையுடனும் சுவாரஸியமாகவும் கூறுவதுதான் இந்த படத்தின் திரைக்கதை என கூறப்படுகிறது.

More News

ரஜினி ரசிகரை அஜீத் ரசிகராக மாற்றினாரா விஷ்ணுவர்தன்?

இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள 'யட்சன்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது...

விஷால் பாணியில் தந்தையை செலக்ட் செய்த விதார்த்

கடந்த 2013ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கிய 'பாண்டியநாடு' படத்தில் விஷாலின் தந்தையாக மிக இயல்பாக தனது நடிப்பை வெளிப்படுத்திய இயக்குனர் இமயம் பாரதிராஜா...

'தல 56' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்று ஆரம்பம்?

வீரம்' சிவா இயக்கி வரும் அஜீத்தின் 'தல 56' திரைப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தின் வசனக்காட்சிகளின்...

பாலிவுட்டில் பார்வையில் ஆர்யாவின் 'யட்சன்'

சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்' படத்தை ரீமேக் செய்ய பாலிவுட்டில் சல்மான்கானும்...

புலி' படத்தில் விஜய்யின் 3 முக்கிய வேடங்கள்

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் இந்த படத்தின் விறுவிறுப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன...