ஓடிடியில் 'சூரரை போற்று': தயாரிப்பாளர்கள்-திரையரங்கு உரிமையாளர்கள் மோதல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிய பிரம்மாண்டமான திரைப்படம் ’சூரரைப்போற்று’. இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படாததால் வேறு வழியின்றி இந்த படத்தை அமேசானில் வெளியிடவிருப்பதாக சூர்யா சற்று முன் ஒரு அறிக்கை மூலம் தெரிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம்.
சூர்யாவின் இந்த அறிக்கை திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ’சூரரைப்போற்று’ திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிடும் சூரியாவின் முடிவு சுயநலமிக்கது என்று திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் தனது கடும் கண்டனத்தை பதிவு செய்தார். திரையரங்கு உரிமையாளர்கள் தன்னை ஏற்றிவிட்ட ஏணி என்பதை சூர்யா மறந்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஆனால் அதே நேரத்தில் சூர்யாவுக்கு ஆதரவாக மூத்த தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் கருத்து கூறியுள்ளார். கொரோனா காலத்தில் ஓடிடி போன்ற டிஜிட்டல் தளத்தில் படங்களை வெளியிடுவதை தயாரிப்பாளரின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவாக திரையரங்கு உரிமையாளர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் ஓடிடி தளத்தில் வெளியிடும் திரைப்பட நிறுவனங்களில் படங்களை வெளியிட மாட்டோம் என திரையரங்குகள் கூறினால், பெரிய திரைப்படங்களை திரையரங்குகளுக்கு கொடுக்க மாட்டோம் என தயாரிப்பாளர் சங்கம் முடிவு எடுக்க வேண்டிய நிலை வரும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சூர்யாவின் ’சூரரைப்போற்று’ திரைப்படம் ஓட்டியில் ரிலீஸ் ஆகஉள்ளதை அடுத்து தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மோதிக் கொண்ட இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout