10ஆம் வகுப்பு சிறுவனின் ஐடியாவை நிறைவேற்றுங்கள்: பாக்யராஜ் கோரிக்கை
- IndiaGlitz, [Friday,April 03 2020]
சமீபத்தில் உபி மாநிலத்தை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பிரச்சனை தீர அனைத்து மத டிரஸ்ட்கள் வைத்திருக்கும் பணத்தில் 80 சதவீதத்தை அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இந்த பணத்தை பிரதமரின் நிவாரண நிதியாக எடுத்துக்கொண்டால் இந்திய பொருளாதாரம் எளிதில் முன்னேற்றம் அடைந்து விடும் என்றும் யோசனை தெரிவித்திருந்தார்.
பிரதமருக்கு இந்த மாணவர் எழுதிய கடிதம் குறித்து இயக்குனர் கே.பாக்யராஜ் கூறியபோது, ‘இந்த மாணவரின் ஐடியாவை செயல்படுத்துங்கள் என பிரதமர் மோடிக்கு தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் இருந்து தான் கடிதம் எழுதி கோரிக்கை வைத்திருப்பதாகவும், நீங்கள் ஒவ்வொருவரும் இதேபோல் இந்த விஷயத்தை பிரதமருக்கு வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் மனிதனுக்கு ஏற்றமோ தாழ்வோ வரும்போது ‘இதுவும் கடந்து போகும்’ என்பது ஞாபகத்திற்கு வரவேண்டும் என்றும் இந்த இக்கட்டான கொரோனா பிரச்சனையும் கடந்து போகும் என்று கூறிய கே.பாக்யராஜ், அனைவரும் தனித்திருக்க வேண்டும் என்றும் அரசு கூறிய ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார். மேலும் ’உதவி செய்வதிலேயே பெரிய உதவி பிரதிபலன் பாராது செய்யும் உதவி தான்’ என்பது போல் நமக்காக காவல்துறையினர், டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ அதிகாரிகள் உள்பட பலர் சேவை செய்து வருவதாகவும் அவர்களுக்கு தனது பாராட்டுக்கள் என்றும் கூறினார்.