பாலியல் பிரச்சனைகளுக்கு பெண்களும் காரணம்: கே.பாக்யராஜ் பேச்சு
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலியல் குற்றங்களுக்கு பெண்களே காரணம் என்றும் பெண்கள் இடம் கொடுக்காமல், சுய கட்டுப்பாடுடன் இருந்தால் பாலியல் பிரச்சினைகள் இருக்காது என்றும் பிரபல இயக்குநர் கே பாக்யராஜ் அவர்கள் திரைப்பட விழாவில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்ட கே பாக்யராஜ் பேசும் போது ’ஆண்கள் சின்னவீடு வைத்துக் கொண்டாலும் பெரிய வீட்டை எந்தவித தொந்தரவும் செய்ய மாட்டார்கள் என்றும், ஆனால் பெண்கள் குடும்பத்தை, கணவனை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் கள்ளக்காதல் வைத்தால் கணவனையோ அல்லது குழந்தைகளை கொல்லும் அளவுக்கு துணிகிறார்கள் என்றும் இதனால் பெண்கள் முறை தவறும் போது குடும்பத்தில் விபரீதம் நடப்பதாகவும் அவர் பேசினார்
மேலும் ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என்பது காமெடியாக சொல்லப்பட்ட ஒரு விஷயம் அல்ல என்றும் உண்மை அதுதான் என்றும் கூறிய கே.பாக்யராஜ், பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகள் ஆண்களாக இருந்தாலும், அந்த குற்றங்கள் செய்ய பெண்களும் ஒரு காரணமாக இருந்திருக்கின்றார்கள் என்றும் கூறினார்.
மேலும் செல்போன் வந்த பிறகு தான் குற்றங்கள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாகவும் செல்போனை தேவையானதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பெண்கள் குறித்து கே.பாக்யராஜ் கூறியதற்கு ஆண்கள் தரப்பில் இருந்து வரவேற்பு கிடைத்தாலும், பெண்கள் தரப்பில் இருந்து என்னவிதமான ரியாக்சன் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments