அரசியலில் வாரிசுகள் ஒரே இரவில் முன்னுக்கு வந்துவிடலாம்: உதயநிதி குறித்து பிரபல இயக்குனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதிக்கு சமீபத்தில் திமுகவின் இளைஞரணி செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. உதயநிதி தீவிர அரசியலில் இறங்கி ஒருசில மாதங்களே ஆன நிலையில் அவருக்கு இவ்வளவு பெரிய பதவியா? என அரசியல் விமர்சகர்கள் உதயநிதியை விமர்சனம் செய்து வருகின்றனர்.
மேலும் திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என வாரிசுகள் மட்டுமே பதவி பெற்று வருவதாகவும், தொண்டர்கள் எப்போதுமே தொண்டர்களாகவே இருப்பதாகவும் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் உதயநிதிக்கு பதவி கொடுத்ததை திமுக, காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
இந்த நிலையில் உதயநிதிக்கு கொடுக்கப்பட்ட பதவி குறித்து இயக்குனர் கே.பாக்யராஜ் கருத்து கூறியபோது, 'சினிமாவில் வாரிசுகளுக்கு அவ்வளவு எளிதில் வெற்றி வசப்படுவதில்லை; போராடிதான் வெற்றிபெற வேண்டியுள்ளது. ஆனால் அரசியலில் அப்படியில்லை, ஒரே இரவில் முன்னுக்கு வந்து விடுகிறார்கள் என உதயநிதி பதவி குறித்து பாக்யராஜ் விமர்சனம் செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments