தமிழக அமைச்சரை நேரில் சந்தித்த கே.பாக்யராஜ்: என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் சங்கரதாஸ் சுவாமி அணியின் சார்பில் நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகரும் இயக்குனருமான கே பாக்யராஜ், தற்போது ஒரு சில கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களை சங்கரதாஸ் அணியின் சார்பில் சந்தித்து உள்ளார். இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் வாழும் அனைத்து நாடகக் கலைஞர்கள் மற்றும் கலைநிகழ்ச்சி கலைஞர்கள் அனைவரும் கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனர். அவர்கள் தங்கள் தொழில் மூலம் வாழ்வாதாரம் நடத்திட வழிவகை செய்திடும் வகையில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கான கோரிக்கை மனுவையும், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்களுக்கான கோரிக்கை மனுவையும், நேற்று 15 .9 .20ஆம் தேதி அன்று மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்களிடம், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரியாதைக்குரிய டாக்டர். ஐசரி.கே. கணேஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படி திரைப்பட இயக்குனர் & நடிகருமான மரியாதைக்குரிய கே. பாக்யராஜ் அவர்கள் தலைமையில், திரைப்பட கலைஞரும் கலைமாமணியுமான திருமதி.குட்டிபத்மினி அவர்கள் சுவாமி சங்கரதாஸ் அணியின் சார்பாக நேரில் சந்தித்து கொடுத்தனர். பரிசீலனை செய்து, ஆவண செய்வதாக அமைச்சர் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com