பொறுத்தார் பூமி ஆள்வார்: முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பிய கே.பாக்யராஜ்

தமிழக முதல்வராக நேற்று பொறுப்பேற்ற முக ஸ்டாலின் அவர்களுக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துக்களை நேரிலும், சமூக வலைத்தளங்களிலும், தொலைபேசியிலும் தெரிவித்தனர் என்பது குறித்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம். இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இயக்குனர் பாக்யராஜ் கடிதம் மூலம் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது:

உயர்திரு முக ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் தங்களுடன் பொறுப்பேற்கும் அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் பணிவன்பான வணக்கத்துடன் வாழ்த்துகளுடன் உங்கள் பாக்யராஜ் எழுதுவது. பொறுத்தார் பூமி ஆள்வார், ஆளும் பொறுப்பு தங்களை தேடி வர அப்பாவின் ஆசை கனிந்துள்ளது. அதைவிட தங்களது தன்னம்பிக்கையும் தளராத உழைப்புமே மிக மிக உன்னதமானது என மனம் நெகிழ்கிறது. தேர்தல் முடிவு வந்ததுமே சந்தித்து வாழ்த்த நினைத்தேன். ஆனால் எனக்கு இருந்த நோயின் அறிகுறி, சளி தொல்லை காரணமாக தங்களை அசெளகர்யப்படுத்த விரும்பாது தவிர்த்தேன். இப்போது அதிகாரபூர்வமாக தொற்று உறுதியானதால் காலதாமதமின்றி கடிதம் மூலமாக வாழ்த்துகிறேன்.

தமிழ் சமுதாயத்தை சீரமைக்கவும் சிறப்பான சேவை பணியாற்றிய அப்பாவின் எழுத்தாணியுடன் அன்பு மகனாக தாங்கள் அனைத்து தமிழ் தாய்மார்களின் சுமை குறைத்து, கொரோனா நோயாளிகள் துயர் துடைக்கும் பொருட்டு நிறைவான பால் வார்த்து விட்டீர்கள், குறைவான விலையில். நெகழ்வாக இருந்தது. காவல்துறை நண்பர்கள் குறித்தும் கருணையுடன் பரிசீலித்து தருகிறீர்கள், மகிழ்வு.

எனது குடும்பத்தார், பாக்யா குடும்பத்தினர் மற்றும் எழுத்தாளர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களின் குடும்பம் சார்பாக வாழ்த்துகிறேன். நிறைவான ஆட்சி அரங்கேறி நாடு நலம் பெற அப்பாவின் அருளும் இருக்கும் என வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

More News

நடிகை ப்ரியா பவானிசங்கர் வீட்டில் நிகழ்ந்த சோகம்: நெகிழ்ச்சியுடன் செய்த பதிவு!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான ப்ரியா பவானி சங்கர் தற்போது ஒரே நேரத்தில் சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் ஒரு இரும்பு மனிதர், அசைக்கவே முடியாது: ரம்யா பாண்டியனின் இன்ஸ்டா பதிவு

நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் செய்திகள் வெளியானது

உங்கள் தொகுதியில் முதலமைச்சராக ஷில்பா பிரபாகர் நியமனம்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னதாக சட்டமன்றத் தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொண்டபோது அனைத்து மாவட்டங்களிலும் குறைத்தீர்ப்பு கூட்டத்தை நடத்தி அதன் மூலம் பல ஆயிரக்கணக்கான மனுக்களை பெற்று இருந்தார்.

கார்த்தி நழுவ விட்ட வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்ட விஷால்!

நடிகர் கார்த்தி நடிக்க வேண்டிய திரைப்படம் ஒன்றில் தற்போது விஷால் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 

தமிழகத்தில் ஊரடங்கு குறித்து நடிகர் சித்தார்த் கருத்து!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மே 10ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.