கே.பாலசந்தரின் மனைவி ராஜம் காலமானார்.

  • IndiaGlitz, [Monday,November 26 2018]

கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரின் குருநாதர் மற்றும் இயக்குனர் சிகரமுமான கே.பாலசந்தர் கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் மரணம் அடைந்தார். இந்த நிலையில் இயக்குநர் கே.பாலசந்தரின் மனைவி ராஜம் அவர்கள் இன்று அதிகாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 82.

கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்த ராஜம் அவர்கள், சிகிச்சையின் பலனின்றி இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாலசந்தர்-ராஜம் தம்பதிக்கு புஷ்பா கந்தசாமி, பிரசன்னா பாலசந்தர், கைலாசம் பாலசந்தர் ஆகிய வாரிசுகள் உள்ளனர்.

மறைந்த ராஜம் அவர்களின் இறுதி சடங்கு இன்று மதியம் 3 மணிக்கு மேல் சென்னையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜம் அவர்களின் மறைவிற்கு கோலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More News

தூக்குத்துரைன்னா அடாவடி: 'விஸ்வாசம்' மோஷன் போஸ்டர் விமர்சனம்

அஜித் நடித்த விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படம் குறித்த எந்த அப்டேட்டும் இல்லாததால் ஒரு கட்டத்தைல் அஜித் ரசிகர்கள்

'தளபதி 63' படத்தில் லேடி சூப்பர் ஸ்டார்: அதிகாரபூர்வ அறிவிப்பு

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கவுள்ள 'தளபதி 63' படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டு இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டது.

எது பேசறதா இருந்தாலும் ஜெயிச்சுட்டு பேசு: 'கனா' டிரைலர் விமர்சனம்

சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள முதல் படமான 'கனா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

முரட்டு உருவம், மழலை உள்ளம்: அம்பரீஷூக்கு கமல் இரங்கல்

பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் நேற்று உடல்நலக்கோளாறு காரணமாக காலமானதை அடுத்து கன்னட திரையுலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

பற்றி எரியும் பாரீஸ்: போர்க்களமான பெட்ரோல் விலை உயர்வு போராட்டம்

பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தால் அந்நாட்டின் தலைநகர் பாரீஸ் போர்க்களம் போல் காட்சி அளிக்கின்றது.