ரஜினிகாந்த் பெயரே இப்படித்தான் வந்தது… சூப்பர் ஸ்டார் குறித்து வெளியான மாஸ் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்பட்டு வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உண்மையான பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்பது பெரும்பாலான ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும். கர்நாடகாவில் பிறந்து அந்த மாநில பேருந்தில் நடத்துனராகப் பணியாற்றி, பின்னர் தென்னிந்திய சினிமா முதல் பாலிவுட் வரை ஒட்டுமொத்த ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறார்.
இப்படி உலகம் போற்றும் நடிகராக இருந்துவரும் சூப்பர் ஸ்டாருக்கு ரஜினிகாந்த் என்ற பெயர் எப்படி வந்தது எனும் சீக்ரெட் தகவல் தற்போது வெளியாகி அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது ஒரு ஹோலி பண்டிகை தினத்தில் நம்முடைய சிவாஜி ராவ் கெய்க்வாட் இயக்குர் சிகரம் கே.பாலச்சந்தரை சந்தித்து வாய்ப்பு தேடியுள்ளார். அந்தத் தருணத்தில் அவருடைய பெயரை ரஜினிகாந்த் என கே.பாலச்சந்தர் அவர்கள் மாற்றியுள்ளார்.
இந்த நிகழ்வு குறித்து பேசியுள்ள கவிதாலயா புரொடக்ஸன் நிறுவனம், எங்களுக்கு ஹோலியை கொண்டாடுவதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. இன்றுதான் இயக்குநர் கே.பாலச்சந்தர், சூப்பர் ஸ்டாருக்கு ரஜினிகாந்த் எனப் பெயர் வைத்தார் எனக் குறிப்பிட்டு டிவிட்டரில் கருத்துப் பதிவிட்டள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளியிட்டு வருகின்றனர்.
இதற்குமுன்பு கே.பாலச்சந்தர் மற்றும் சூப்பர்ஸ்டார் இருவரும் ஒருமுறை இயக்குநர் சங்க விழாவில் கலந்துகொண்டபோது இயக்குநர் அவர்கள், நான் உனக்கு எப்போது ரஜினிகாந்த் என்று பெயர் வைத்தேன் தெரியுமா? எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த சூப்பர்ஸ்டார் ஹோலி பண்டிகையன்று எனப் பதிலளித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Kavithalayaa wishes you a very Happy Holi!
— Kavithalayaa (@KavithalayaaOff) March 18, 2022
We have more reasons to celebrate this day, as it marks
the day KB named our SuperStar as “@rajinikanth”❤️ pic.twitter.com/ONuITwjn1y
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout