கே.பாலசந்தர் அறிமுகம் செய்த 2 இசையமைப்பாளர்களுக்கும் ஆஸ்கர்.. ஜீனியஸ்களை கண்டுபிடித்த ஜீனியஸ்..!

  • IndiaGlitz, [Tuesday,March 14 2023]

இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் அறிமுகம் செய்த இரண்டு இசையமைப்பாளர்களுமே ஆஸ்கர் விருதுகளை வென்று உள்ளனர் என்பதை அடுத்து ஜீனியஸ்களை கண்டுபிடித்த ஜீனியஸ் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மறைந்த இயக்குனர் பாலச்சந்தருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த இயக்குனர் கே பாலச்சந்தர் அவர்கள் திறமையாளர்களை கண்டுபிடிப்பதில் திறமையானவர் என்பதும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்களை அவர் தான் திரை உலகில் பிரபலம் ஆக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் பாலச்சந்தர் தமிழில் அறிமுகம் செய்த இரண்டு இசையமைப்பாளர்களான எம்எம் கீரவாணி மற்றும் ஏஆர் ரகுமான் ஆகிய இருவருமே ஆஸ்கர் விருதுகளை வென்று உள்ளனர்

கே பாலச்சந்தர் கடந்த 1990 ஆம் ஆண்டு இயக்கிய ’அழகன்’ என்ற திரைப்படத்தில் தான் மரகதமணி என்ற பெயரில் எம்எம் கீரவாணி இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் கே பாலசந்தர் இயக்கத்தில் உருவான ’வானமே எல்லை’ ’ஜாதி மல்லி’ ஆகிய படங்களுக்கும் மரகதமணி தான் இசையமைத்தார். தெலுங்கு திரையுலகில் பிஸியாக இருந்ததால் அவர் அதிக தமிழ் படங்களில் அவர் இசையமைக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் ’சந்திரமுகி 2’ படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இசைப்புயல் ஏஆர் ரகுமான் பாலச்சந்தர் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’ரோஜா’ என்ற திரைப்படத்தில் தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு பாலச்சந்தர் இயக்கிய ’டூயட்’, பாலசந்தரின் 100வது படமான ‘பார்த்தாலே பரவசம்’ உட்பட ஒரு சில படங்களுக்கு இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பாலச்சந்தரால் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு இசையமைப்பாளர்களும் உலகின் மிகப்பெரிய ஆஸ்கர் விருதை வாங்கி உள்ளதை அடுத்து இது குறித்து செய்திகள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

More News

நான்  வேணும்னா வேலையை ராஜினாமா செய்திடட்டுமா?  ரவிச்சந்திரன் அஸ்வின்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான சுப்மன் கில் மற்றும் புஜாரா ஆகிய இருவரும் நேற்று முடிவடைந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான போட்டியில் பந்து வீசியது

ஷங்கரின் அடுத்த படத்தில் அஜித் வில்லனா? 'ரோலக்ஸ்' மாதிரி மாஸ் கேரக்டரா?

ஷங்கரின் அடுத்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க அஜித்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் 'விக்ரம்' படத்தில் வரும் ரோலக்ஸ் கேரக்டர் போல் மாஸ் கேரக்டர் இது என்றும் கூறப்படுவது

மிகப்பெரிய இழப்பு.. மறைந்த நடிகர் விவேக் குறித்து ஏ.ஆர்.ரஹ்மானின் பதிவு..!

நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு காலமான நிலையில் அவரது மறைவு மிகப்பெரிய இழப்பு என இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

ஆஸ்கர் விருது வென்ற படத்திற்கும் 'சூரரை போற்று' படத்திற்கும் இப்படி ஒரு தொடர்பா?

ஆஸ்கர் விருது வென்ற "தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்" என்ற தமிழ் குறும்படத்திற்கும் 'சூரரை போற்று' படத்திற்கும் தொடர்பு உள்ளது என்ற தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அன்றே கணித்த கமல்ஹாசன்.. 4 ஆஸ்கர் விருது வென்ற படம் குறித்து என்ன சொன்னார் தெரியுமா?

 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் 'All Quiet on the Western Front' என்ற திரைப்படம் நான்கு விருதுகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த சர்வதேச திரைப்படம்,