ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' ரிலீஸ் எப்போது?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2000ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா, 2015ஆம் ஆண்டு வெளிவந்த '36 வயதினிலேயே' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆனார். இந்த படம் கொடுத்த மாபெரும் வெற்றியை அடுத்து நல்ல கேரக்டர் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பேன் என்று அவர் கூறியிருந்தார்
இந்நிலையில் 'குற்றம் கடிதல்' இயக்குனர் பிரம்மா இயக்கத்தில் 'மகளிர் மட்டும்' என்ற படத்தில் ஜோதிகா நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படம் வரும் பிப்ரவரியில் வெளியாகும் என்றும் சரியான ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஜோதிகா, நாசர், லிவிங்ஸ்டன், சரண்யா, பானுப்ரியா, ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு மணிகண்டன் ஒளிப்பதிவும், பிரேம் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments