தியேட்டர் ரிலீசுக்கு முன்பே டிவியில் வெளியாகும் ஜோதிகா படம்

  • IndiaGlitz, [Sunday,March 04 2018]

பொதுவாக ஒரு திரைப்படம் தியேட்டரில் வெளியாகி குறைந்தது ஒருசில மாதங்கள் கழித்து தான் டிவியில் ஒளிபரப்புவது வழக்கம். ஆனால் ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' திரைப்படம் தற்போது “மாயா வர்ணங்கள்” என்ற பெயரில் மலையாளத்தில் டப் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த படம் கேரளாவில் இன்னும் வெளியாகாத நிலையில் 'மகளிர் மட்டும்' திரைப்படம் தமிழில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

பல தமிழ்ப்படங்கள் நேரடியாக மலையாள சேனல்களில் தமிழில் ஒளிபரப்பியுள்ள போதிலும், ஒரு படத்தின் டப்பிங் படம் உருவாகி அந்த படம் வெளிவருவதற்குள் டிவியில் வெளியாகும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது

தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரம்மா இயக்கியுள்ள இந்த படத்தில் ஜோதிகா, ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா, நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

உளவியல் அரசியல் பேசும் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்

'கபாலி', காலா' படங்களை இயக்கிய பா.ரஞ்சித் தனது நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வரும் படம் 'பரியேறும் பெருமாள். இயக்குநர் ராம் அவர்களின் இணை இயக்குநரான மாரிசெல்வராஜ்,

தளபதி 62' படத்தில் இணைந்த பிரபல அரசியல்வாதி

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.

கமல், ரஜினியை அடுத்து அரசியல் களத்தில் சத்யராஜ்?

நடிகர் சத்யராஜ் அவர்களும் அரசியல் களத்தில் குதிக்கவுள்ளார். ஆனால் அவர் குதிப்பது நிஜ அரசியலில் இல்லை என்பதும் சினிமா அரசியலில் அவர் குதிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய்யின் அசத்தலான இன்னொரு சாதனை

தளபதி விஜய் நடிக்கும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு சாதனையை முறியடித்து வரும் நிலையில் தற்போது இன்னொரு சாதனை குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

சூர்யா 36' படத்தின் முக்கிய பணி முடிந்தது

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'சூர்யா 36' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு அட்டகாசமான அறிமுக காட்சி இருப்பது தெரியவந்துள்ளது.