close
Choose your channels

ரஜினிக்கு ரசிகையாக மாறுகிறாரா ஜோதிகா?

Tuesday, May 8, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'நாச்சியார்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் மணிரத்னம் இயக்கி வரும் 'செக்க சிவந்த வானம்' மற்றும் ராதாமோகன் இயக்கி வரும் 'காற்றின் மொழி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மஞ்சுவாரியர் நடித்த மலையாள திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படம் ஒன்றில் நடிக்க ஜோதிகா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. மோகன்லால் ரசிகையாக மஞ்சுவாரியர் நடித்த மலையாள திரைப்படம் 'மோகன்லால்'. இந்த படத்தின் தமிழ் ரீமேக் தயாரிக்கும் முயற்சியில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் முயற்சித்து வருவதாகவும், இந்த படத்தில் மஞ்சுவாரியர் கேரக்டரில் நடிக்க ஜோதிகாவிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

மோகன்லால்' படத்தில் மோகன்லாலின் தீவிர ரசிகையாக மஞ்சுவாரியர் நடித்திருந்த நிலையில் இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டால் ரஜினிகாந்த் ரசிகையாக ஜோதிகா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும்,. இந்த படத்திற்கு 'ரஜினி செல்வி' என்ற டைட்டிலும் முடிவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே மஞ்சுவாரியர் நடித்த 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக் படமான '36 வயதினிலே' படத்தில் ஜோதிகா நடித்திருந்தார் என்பதும், அந்த படம் சூப்பர் ஹிட் என்பதும் அனைவரும் அறிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment