தலைகீழாக தொங்கி கொண்டு பந்து விளையாடும் ஜோதிகா.. வேற லெவல் வொர்க்-அவுட் வீடியோ..!

  • IndiaGlitz, [Wednesday,March 06 2024]

நடிகை ஜோதிகா அவ்வப்போது வொர்க்-அவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வொர்க்-அவுட் வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

கடந்த 2000ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் ஜோதிகா. கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, மாதவன், சிம்பு, என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார் என்பதும் தெரிந்தது.

கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பின்னர் திரையுலகிலிருந்து தற்காலிகமாக விலகிய ஜோதிகா அதன் பின் சில வருடங்கள் கழித்து மீண்டும் ரீஎண்ட்ரி ஆனார் என்பதும் தற்போதும் கோலிவுட், பாலிவுட்டில் சில படங்களில் நடித்து பிசியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஜோதிகாவுக்கு மூன்று மில்லியனுக்கும் மேலாக ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் அவ்வப்போது அவர் வொர்க்-அவுட் செய்யும் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வொர்க்-அவுட் வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர்.

குறிப்பாக அவர் தலைகீழாக தொங்கி கொண்டு பந்து விளையாடும் காட்சியை பார்த்து இந்த வயதிலும் ஜோதிகா அபாரமாக உடற்பயிற்சி செய்கிறார் என்றும், இது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஊக்கம் அளிக்கும் ஒரு வீடியோவாக உள்ளது என்றும் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

More News

மனோவை கொண்டாடிய சிறப்பு விருந்தினர்கள், சூப்பர் சிங்கரில் நிகழ்ந்த நெகிழ்ச்சி தருணம் !!

தமிழ் மக்களிடையே மிகப்பிரபலமான நிகழ்ச்சியாகக் கொண்டாடப்படும், சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் 10  வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில், கடந்த வாரம் பாடகர்

முன்னாள் TikTok பிரபலம் அகோரியாக மாறிய கதை - அதிர்ச்சி தரும் பேட்டி!

முன்னாள் TikTok பிரபலம் கலையரசன், தனது அதிர்ச்சி தரும் வாழ்க்கை பயணம் மற்றும் அகோரியாக மாறிய அனுபவங்கள் குறித்து ஆன்மீக Glitz யூடியூப் சேனலில் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

ஜேசன் சஞ்சய் முதல் படத்தின் நாயகன் இவரா? லிஸ்ட்லேயே இல்லையே!

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடர்ந்து நடந்து

விஜயகாந்த் கதை கேட்டு ஓகே சொன்ன படம்.. சண்முகபாண்டியன் அடுத்த படத்தின் அப்டேட்..!

கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் காலமான நிலையில் அவரது மகன் சண்முகபாண்டியன் 'படைத்தலைவன்' என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஒரே படத்துடன் திரையுலகில் இருந்து 'குணா' நாயகி வெளியேறியது ஏன்? 33 ஆண்டு ரகசியம்..!

கடந்த 1991 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த 'குணா' திரைப்படம் வெளியானபோது அனைத்து ஊடகங்களும் அந்த படத்தை பாராட்டினாலும் ரசிகர்கள் மத்தியில் அந்த படம்