close
Choose your channels

ராகவா லாரன்ஸ் இயக்கும் 'நாகா'வில் ஜோதிகா?

Wednesday, August 5, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எட்டு வருட இடைவெளிக்கு பின்னர் சமீபத்தில் ஜோதிகா நடித்த '36 வயதினிலே' திரைப்படம் ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் அமோக ஆதரவை பெற்றது மட்டுமின்றி நல்ல வசூலும் செய்தது. ஒரு தயாரிப்பாளராகவும், நடிகையாகவும் மீண்டும் வெற்றிகரமாக ரீ எண்ட்ரி ஆன ஜோதிகா, நல்ல ரோல் கிடைத்தால் மீண்டும் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்நிலையில் 'காஞ்சனா 2' என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த ராகவா லாரன்ஸ் இயக்கவிருக்கும் 'காஞ்சனா 3' என்ற 'நாகா' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஜோதிகா இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் அவர் கேட்கும் தொகையை தயாரிப்பு நிறுவனமும் தர தயாராக உள்ளதாக கூறப்படும் நிலையில் ஜோதிகா என்ன முடிவெடுப்பார் என்பதை அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.

ஜோதிகா ஏற்கனவே ரஜினி நடித்த 'சந்திரமுகி' படத்தில் பேய் வேடத்தில் நடித்த அனுபவம் கொண்டவர் என்பதால் இந்த படத்திலும் அவர் பேயாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment