சூர்யா எல்லாவற்றிலும் 200% தான்.. 'கங்குவா' குறித்து ஜோதிகா கூறிய தகவல்..!

  • IndiaGlitz, [Thursday,May 02 2024]

சூர்யா நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை ஜோதிகா, ‘கங்குவா’ படம் குறித்தும் சூர்யா குறித்தும் தெரிவித்துள்ளார்.

சூர்யா எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் அவர் 200% தன் முழு ஈடுபாட்டை கொடுப்பார். மனைவி குழந்தைகள் என குடும்பத்தை கவனித்து கொள்வதில் அவர் எப்போதும் 200 சதவீதம் முழுமையாக ஈடுபாட்டில் இருப்பார். அதேபோல் தான் அவர் தனது தொழிலிலும் 200% கவனம் செலுத்தி வருகிறார் என்றும் தெரிவித்தார்.



‘கங்குவா’ படத்தில் ஒரு சில காட்சிகளை மட்டும் நான் பார்த்தேன், அந்த காட்சிகளை பார்க்கும்போது சினிமா முதல்முறையாக ஒரு புதிய வித்தியாசமான அனுபவத்தை பெறப்போகிறது என்றும் அவர் தெரிவித்தார். ஜோதிகாவின் இந்த பேட்டியை பார்க்கும்போது ‘கங்குவா’ படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.

இதுவரை இல்லாத சாதனையாக ‘கங்குவா’ திரைப்படம் தமிழில் தயாரானாலும் 48 மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப் போவதாகவும் திரையரங்குகளில் 10 மொழிகளிலும் ஓடிடியில் 48 மொழிகளிலும் திரையிடப்படுவது இந்திய திரை உலகில் இதுவரை இல்லாத சாதனையாக கருதப்படுகிறது மேலும் கடந்த மார்ச் மாதம் இந்த படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து அடுத்த கட்டமாக ட்ரைலர், இசை வெளியீட்டு விழா ஆகியவற்றை படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.300 கோடி என கூறப்படுகிறது.

 

More News

அஜித் இல்லாமல் ஆரம்பமாகிறதா 'குட் பேட் அக்லி' படப்பிடிப்பு? ஆதிக் திட்டம் என்ன?

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் மே 10ஆம் தேதி முதல் அவர் நடிக்கும் அடுத்த படமான 'குட் பேட் அக்லி'

பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்.. கணவரின் முக்கிய வேண்டுகோள்..!

பின்னணி பாடகி உமா ரமணன் காலமானதை அடுத்து அவரது கணவர் வேண்டுகோள் விடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரீரிலீஸிலும் அஜித் , விஜய் ரசிகர்கள் மோதலா? சென்னையின் முக்கிய திரையரங்கில் பரபரப்பு..!

அஜித், விஜய் நடித்த படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் தியேட்டரில் பரபரப்பு ஏற்படும் என்பதும் அஜித், விஜய் ரசிகர்கள் மாறி மாறி தங்களுக்கு விருப்பமான நடிகரின் பெயர்களை கோஷம் போடும் போது

மனைவி பரிசாக கொடுத்த பைக்கில் மாஸ் காட்டும் அஜித்.. வைரல் புகைப்படம்..!

நடிகர் அஜித் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருடைய மனைவி டுகாட்டி பைக் ஒன்றை பரிசாக கொடுத்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

'தாடி நீவும் அழகை பாக்க கூடி நிக்கும் ஊரு'.. 'புஷ்பா 2' படத்தின் அசத்தலான சிங்கிள் பாடல்..!

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது