'தளபதி 61' படத்தில் இருந்து வெளியேறியது ஏன்? முதல்முறையாக மனம் திறந்த ஜோதிகா

  • IndiaGlitz, [Wednesday,April 26 2017]

அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தில் மூன்று நாயகிகள் என்று முடிவு செய்த பின்னர் அவர்கள் ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா என்று தான் முதலில் உறுதி செய்யப்பட்டது. இந்த தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு முதல்கட்ட படப்பிடிப்புக்கு முன்னர் ஜோதிகா போட்டோஷூட்டிலும் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஒருசில நாட்களுக்கு முன்னர் ஜோதிகா திடீரென 'தளபதி 61' படத்தில் இருந்து விலகினார். தற்போது ஜோதிகா நடிக்கவிருந்த கேரக்டரில் நித்யாமேனன் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஜோதிகா' தளபதி 61' படத்தில் இருந்து விலக சூர்யாவும், அவரது குடும்பத்தினர்களும் தான் காரணம் என்று சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவியது. இதுகுறித்து இதுவரை விளக்கம் அளிக்காமல் மெளனமாக இருந்த ஜோதிகா முதல்முறையாக இதுகுறித்து பேட்டில் ஒன்றில் கூறியதாவது:
'விஜய் 61' படத்தில் நடிக்காததற்கு எனது கணவர் சூர்யாவும், எனது குடும்பத்தினரும் காரணமல்ல. வெளியிலிருந்து வரும் அழுத்தத்திற்காக, யாரும் கடைசி நேரத்தில் படத்திலிருந்து வெளியேற மாட்டார்கள். எனக்கு அந்த படத்தில் சில பிரச்சனைகள் இருந்தது. அவை பின்னர் சுமூகமாக முடித்து வைக்கப்பட்டது. அது என்ன பிரச்சனைகள் என்பது குறித்து இங்கு விவாதிக்க விரும்பவில்லை. ஆனால் சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யானவை.” என்று மனம் திறந்து கூறினார்.

More News

பாகுபலி 2: ஒரு முன்னோட்டம். இந்தியாவின் பிரமாண்டமான படத்தை உற்சாகமாக வரவேற்போம்

உலக அரங்கில் தென்னிந்திய சினிமாவின் தரத்தைப் பறைசாற்றி இந்தியர்கள் அனைவரையும் பெருமைப்பட வைத்த படம் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘பாகுபலி’. இந்தப் பிம்மாண்ட வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகம் 'பாகுபலி 2' இந்த வாரம் வெளியாகிறது.. ஹாலிவுட்டில் ஜேம்ஸ்பாண்ட், அர்னால்ட், சில்வர்ஸ்டர் ஆகியோர்கள் படங்கள் ரூ.500 கோடி, ரூ.1000 கோடி வசூல் செய்&#

டிடிவி தினகரனை அடுத்து டெல்லி போலீஸ் வளையத்தில் இரண்டு அதிமுக விஐபிகள்?

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரா மூலம் லஞ்சம் கொடுக்க முயற்சித்த டிடிவி தினகரன் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார்,. இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுவார் என்றும் அதன்பின்னர் அவரை போலீஸ் காவலில் எடுத்து மீண்டும் விசாரிக்கவும் டெல்லி போலீஸார் திட்டமி

மணிரத்னம் பட தோல்விக்கு வைரமுத்து பாடல் காரணமா?

மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து இந்த மூன்று ஜாம்பாவன்கள் இணைந்து உருவாக்கிய பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது. ஒருசில படங்கள் தோல்வி அடைந்தாலும், அந்த படத்தின் பாடல்கள் நிச்சயம் ஹிட் ஆகியிருக்கும். அந்த வகையில் இந்த மூவரும் இணைந்து தோல்வி அடைந்த ஒரு படம் 'திருடா திருடா', ஆனால் இந்த படத்தின் பாடல்கள் இன்றளவும் சிறந்த பாடல்களாக 

தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படம் தொடங்குவது எப்போது? புதிய தகவல்

தனுஷ் இயக்கிய 'ப.பாண்டி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வடசென்னை' படத்தில் நடித்து வருகிறார். மேலும் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படமும் இறுதிக்கட்டத்தில் உள்ளது...

ஜனாதிபதி பதவிக்கு இவர் ஒருவர்தான் தகுதியானவர். சுப்பிரமணியன் சுவாமி

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் முடிவடையும் நிலையில் புதிய ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக உள்ளன. சமீபத்தில் நடந்த ஐந்து மாநில தேர்தலில் அமோக வெற்றி பெற்றதால் கிட்டத்தட்ட பாஜக தேர்வு செய்யும் வேட்பாளர்தான் அடுத்த ஜனாதிபதி என்பது உறுதியாகியுள்ளது...