தமிழின் முதல் லெஸ்பியன் திரைப்படம்.. ஜோதிகாவின் கமெண்ட் என்ன தெரியுமா?
- IndiaGlitz, [Thursday,February 16 2023]
தமிழில் முதல் லெஸ்பியன் திரைப்படமான ’காதல் என்பது பொதுவுடமை’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த காதலர் தினத்தில் வெளியான நிலையில் இந்த திரைப்படத்தின் போஸ்டருக்கு நடிகை ஜோதிகா தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காதல் என்பது இரண்டு வெவ்வேறு பாலினங்களுக்கு ஏற்படுவது மட்டுமல்ல, இரண்டு தூய்மையான இதயங்கள் ஒன்று சேர்வது’ என்று ‘காதல் என்பது பொதுவுடமை’ படம் குறித்து நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார். இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுருதி பெரியசாமி, ‘ஜெய்பீம்’ படத்தில் நடித்த லிஜோமால் மற்றும் ரோகிணி, அனுஷா, தீபா, வினித் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளார்.
சதீஷ் கோகுலகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தர்ஷன் ரவிக்குமார் இசையமைத்திருக்கிறார். ஆர்.எல். விக்னேஷ் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, ரவி பாண்டியன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். லெஸ்பியன் உறவை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஷார்ட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இசை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நடிகை நீலிமா இப்படத்திற்கு இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.