இளம்பெண்கள் சேலை அணிய ஜோதிகா வேண்டுகோள்

  • IndiaGlitz, [Tuesday,August 08 2017]

கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைவரும் கைத்தறி உடைகளை அணிய வேண்டும் என்றும் குறிப்பாக கைத்தறி சேலைகளை இளம்பெண்கள் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வு கடந்த சில மாதங்களாகவே ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தெலுங்கானா மாநிலத்தில் கைத்தறி விற்பனையை ஊக்கப்படுத்த பிரபல நடிகை சமந்தாவை தெலுங்கானா அரசு கைத்தறி துறையின் தூதராக நியமித்துள்ளது. இதனால் தெலுங்கானாவில் பல இளம்பெண்கள் மாடர்ன் உடையில் இருந்து சேலைக்கு மாறி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்திலும் இளம்பெண்கள் மத்தியில் கைத்தறி சேலைகள் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சேலை கண்காட்சி ஒன்று சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த கண்காட்சியில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா, 'இளம்பெண்கள் சேலை அணிவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும் என்றும், இந்த சேலை நாகரீகத்தை நாம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், சேலை அணிந்தால் இளம்பெண்கள் அழகாக இருப்பது மட்டுமின்றி நம்முடைய கலாச்சாரமும் பாதுகாக்கப்படும் என்றார்.