ஜோதிகாவின் அடுத்த பட டைட்டில் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Thursday,March 14 2019]

ஜோதிகா நடித்த 'காற்றின் மொழி' படத்திற்கு பின் அவர் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் ஒன்று எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் படம். இந்த படத்தில் ஜோதிகா அரசு பள்ளி ஆசிரியை கேரக்டரில் நடித்து வருகிறார். 'காக்க காக்க' படத்திற்கு பின் அவர் தற்போதுதான் ஆசிரியை கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்திற்கு 'ராட்சசி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கடந்த ஆண்டு 'ராட்சசன்' என்ற திரைப்படம் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆன நிலையில் இந்த ஆண்டு 'ராட்சசி' திரைப்படமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ஜோதிகாவுடன் பூர்ணிமா ஜெயராமன், சத்யன், ஹரீஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

இதேபோல் ஜோதிகா நடித்து வரும் இன்னொரு படத்தை 'குலேபகாவலி' இயக்குனர் கல்யாண் இயக்கி வருகிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் ஜோதிகாவுடன் முக்கிய வேடத்தில் ரேவதி நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.