சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கும் ஜோதிகா.. டைட்டில் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் நடிகை ஜோதிகா இணைந்து நடிக்கும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இது குறித்த போஸ்டர் வைரலாகி வருகிறது.
மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் மம்முட்டி என்பதும் இவர் ஏற்கனவே 4 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த படத்திற்கு ’காதல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஜியோ பேபி என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது தெரிந்ததே.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகளின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
நடிகை ஜோதிகா கடந்த 2021ஆம் ஆண்டு ‘உடன்பிறப்பு’ என்ற படத்தில் நடித்த நிலையில் தற்போது அவர் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Here’s unveiling the title of Mammootty Kampany's next project Directed by Jeo Baby
— Mammootty (@mammukka) October 18, 2022
Kaathal - The Core | @kaathalthecore
Wishing a very happy birthday to Jyotika ??@MKampanyOffl @DQsWayfarerFilm pic.twitter.com/dsnqD6FyW7
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments