சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கும் ஜோதிகா.. டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,October 18 2022]

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் நடிகை ஜோதிகா இணைந்து நடிக்கும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இது குறித்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் மம்முட்டி என்பதும் இவர் ஏற்கனவே 4 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த படத்திற்கு ’காதல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஜியோ பேபி என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது தெரிந்ததே.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகளின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

நடிகை ஜோதிகா கடந்த 2021ஆம் ஆண்டு ‘உடன்பிறப்பு’ என்ற படத்தில் நடித்த நிலையில் தற்போது அவர் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

போட்டியாளர்களின் சம்பளத்தை பார்த்தோம்.. கமலுக்கும் பிக்பாஸ்-க்கும் எவ்வளவு சம்பளம் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 21 போட்டியாளர்களின் சம்பளம் குறித்த முழு தகவல்களை ஏற்கனவே பார்த்த நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கும் பிக்பாஸ்-க்கும்

வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் அஜித் பட நடிகை: வைரல் வீடியோ!

 அஜித் படத்தில் அறிமுகமான நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவலில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இப்படி ஒரு மேலாடையா? உலகத்தில் இதுதான் முதல்முறை? பிக்பாஸ் நடிகையின் வீடியோ வைரல்!

 உலகத்தில் இதுவரை யாருமே அணியாத வகையில் வித்தியாசமான மேலாடை அணிந்துள்ள பிக்பாஸ் நடிகையின் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்

புதிய வீட்டில் பக்காவாக பார் வைத்துள்ள சீரியல் நடிகை.. வாழ்த்து கூறும் ரசிகர்கள்!

பிரபல சீரியல் நடிகை தான் கட்டிய புதிய வீட்டில் பார் செட்டப் வைத்துள்ளதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

'வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றேனா? ஆதாரத்தை வெளியிட்ட சின்மயி!

நடிகை நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் ஒருபக்கம் ஊடகங்களில் செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரட்டை குழந்தை