'ஜோதிகா'தான் எனது ஜாக்பாட்: சூர்யா

  • IndiaGlitz, [Saturday,July 27 2019]

ஜோதிகா, ரேவதி நடித்த 'ஜாக்பாட்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் சூர்யா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சூர்யா பேசியதாவது:

ஜோதிகா உண்மையிலேயே எனக்கு கிடைத்த ஜாக்பாட் என்று சொல்லலாம். ஒன்பது ஆண்டுகள் இடைவெளி விட்டு மீண்டும் சினிமாவுக்கு வந்தபோதிலும், ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும் முன் பலமுறை யோசிப்பார். இந்த படத்தின் கேரக்டரை தன்னால் முழுவதுமாக உள்வாங்க முடியுமா? என்று முழுவதும் நம்பிக்கை வந்தால் மட்டுமே அவர் நடிக்க ஒப்புக்கொள்வார். ஒப்புக்கொண்ட பின்னர் அவருடைய ஈடுபாடு முழு அளவில் இருக்கும். குறிப்பாக 'ஜாக்பாட்' படத்தில் இடம்பெறும் சிலம்பு சண்டை காட்சிக்காக தினமும் இரண்டு மணி நேரம் ஆறு மாதங்கள் சிலம்பு பயிற்சி பெற்றார். அவரை இந்த படத்திற்காக தயார் செய்த இயக்குனர் கல்யாண் அவர்களுக்கு எனது நன்றிகள்.

'ராட்சசி' படம் செய்ததற்கு எப்படி ஒரு முக்கிய காரணம் இருந்ததோ, அதேபோல் 'ஜாக்பாட்' படத்தில் நடிக்கவும் ஒரு காரணம் உண்டு. அதனை நீங்கள் படம் பார்க்கும்போது உணர்வீர்கள். அதேபோல் ஜோதிகா காலை ஐந்து மணிக்கே எழுந்து அன்றைய நாளின் படப்பிடிப்பு வசனங்களை மனப்பாடம் செய்து கொள்கிறார். இவரை பார்த்துதான் நான் சுதா படத்திற்காக அதேபோல் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். இவ்வாறு சூர்யா பேசினார்.