அன்று உங்கள் போஸ்டர் என் பெட்ரூமில்.. இன்று உங்கள் படத்தின் தயாரிப்பாளர்.. ஜோதிகா பெருமிதம்

  • IndiaGlitz, [Friday,July 12 2024]

பிரபல நடிகரின் படத்தை ஜோதிகா தயாரித்து உள்ள நிலையில் ’என்னுடைய இளமைக் காலத்தில் உங்களுடைய போஸ்டரை என்னுடைய பெட்ரூமில் வைத்திருக்கும் ரசிகையாக இருந்தேன், இன்று உங்கள் படத்தை தயாரிக்கும் அளவுக்கு அதிர்ஷ்டசாலி ஆகி உள்ளேன்’ என்று பதிவு செய்துள்ளார்.

சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ’சர்ஃபைரா’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளரான ஜோதிகா தனது சமூக வலைதளத்தில் அக்ஷய் குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்..

நீங்கள் மிகவும் அருமையாக நடித்த ஒரு படத்தின் வெற்றிக்காக நான் வாழ்த்துகிறேன். முன்பு ஒருநாள் உங்களுடைய போஸ்டரை என்னுடைய பெட்ரூம் வைக்கும் அளவுக்கு உங்களுடைய ரசிகையாக இருந்தேன், இன்று உங்களுடைய 150வது படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளராக எனக்கு மிகவும் மகிழ்ச்சி’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அக்ஷய் குமார் உடன் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக வருகிறது.

சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான ’சூரரை போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் திரைப்படமான ’சர்ஃபைரா’ இன்று உலகம் முழுவதும் வெளியாகிருக்கும் நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டி விமர்சனங்கள் குவிந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நுரையீரல் புற்று நோயுடன் போராடி வந்த பிரபல நடிகை காலமானார்.. முதலமைச்சர் இரங்கல்..!

கடந்த சில ஆண்டுகளாக நுரையீரல் புற்று நோயுடன் போராடி வந்த நடிகை காலமானார் என்ற செய்தி திரையுலகினர்களை அதிர்ச்சியில் ஏற்படுத்திய நிலையில் அவரது மறைவுக்கு கர்நாடக முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் மட்டும் இத்தனை படங்கள் ரிலீஸா? நீளும் பட்டியல்..!

ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விடுமுறை தினத்தில் மட்டும் சில முக்கிய படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சின்ன பட்ஜெட் படங்களும் ஏராளமாக வெளியாக இருப்பதாக

இன்று கார்த்தியின் புதிய பட பூஜை.. இயக்குனர் இசையமைப்பாளர் யார்? படப்பிடிப்பு எப்போது?

நடிகர் கார்த்தியின் புதிய படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்த நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ரம்பாவின் 'அழகிய லைலா' பாடலுக்கு செம போஸ் கொடுத்த ரச்சு.. குவியும் கமெண்ட்ஸ்..!

சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக், ரம்பா நடித்த 'உள்ளத்தை அள்ளித்தா' என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற 'அழகிய லைலா' பாடலுக்கு பிக் பாஸ் பிரபலம் ரச்சிதா மகாலட்சுமி செம போஸ்

'கோட்' படத்திற்கு முன்பே ரிலீசாகும் வெங்கட்பிரபுவின் இன்னொரு படம்.. தேதி அறிவிப்பு..!

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ள 'கோட்' திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்