போராடி தோத்துட்டேன்னு சொல்றதுக்கு இது கேம் இல்லை: பொன்மகள் வந்தாள் டிரைலர்

  • IndiaGlitz, [Friday,May 22 2020]

நடிகை ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் கடந்த மார்ச் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில் திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படம் ஓடிடி பிளாட்பாரத்தில் அமேசான் பிரைமில் வரும் 29ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு ட்ரெய்லர் 22ஆம் தேதி அதாவது இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த படம் குழந்தைகள் கடத்தல் கதையம்சம் கொண்ட படம் என்றும் குழந்தை கடத்தலுக்கு எதிராக போராடும் ஒரு வழக்கறிஞராக தான் ஜோதிகா நடித்துள்ளார் என்பதும் டிரைலரில் இருந்து தெரியவருகிறது

டிரைலரில் இருக்கும் ஒவ்வொரு காட்சியும் அதிர வைக்கும் வகையில் உள்ளது என்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மேலும் இந்த படத்தில் ஜோதிகா எடுத்துக்கொண்ட வழக்கு ஒன்றில் தோல்வி அடைந்தவுடன் ’இந்த உலகத்தில் உடல் ரீதியாக துன்புறுத்தப்படும் அனைவரிடத்திலும் உண்மையை தவிர வேறு எந்த சாட்சியும் இருக்காது, போராடி தோத்துட்டேன்னு சொல்றதுக்கு இது கேம் இல்லை, ஜஸ்டிஸ்’ என்று ஜோதிகா பேசும் வசனமே இந்த படத்தின் கதையை ஊகிக்க வைக்கிறது

மொத்தத்தில் ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் ஜோதிகா நடித்த படங்களில் வித்தியாசமான ஒன்றாக இருக்கும் என்பது ட்ரெய்லரில் இருந்து தெரிய வருகிறது

ஜெஜெ பெடரிக் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜோதிகா, பாக்யராஜ், தியாகராஜன், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், உள்பட பலர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையில் ராம்ஜி ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் சூர்யாவின் 2டி இண்டர்நேஷனல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது
 

More News

ஜிவி பிரகாஷ்-கவுதம் மேனன் படத்தில் நாயகியாகும் 'பிகில்' நடிகை!

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் ஒரே நேரத்தில் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் ஒருசில படங்கள் ரிலீசுக்கு தயாராக இருப்பதும் தெரிந்ததே..

தயவுசெய்து இதைமட்டும் யாரும் செய்யாதீங்க: தமன்னா வேண்டுகோள்

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா, இந்த கொரோனா விடுமுறையில் அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பது தெரிந்ததே

1 கோடியே 70 லட்சம் பேரை காவு வாங்கிய ஸ்பானிஷ் ஃப்ளூ!!! நோயிலிருந்து இந்தியா மீண்ட கதை!!!

இன்ஃப்ளூயன்ஸா எனப்படும் ஸ்பானிஷ் காய்ச்சல் உலகம் முழுவதும் 5 கோடி மக்களை கொன்று குவித்ததாக உலகச் சுகாதார அமைப்பும் அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையமும் தகவல் தெரிவிக்கிறது.

தவறான செய்தியை பகிர வேண்டாம்: விஜய்சேதுபதி பட தயாரிப்பாளர் வேண்டுகோள்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய 'இடம் பொருள் ஏவல்' என்ற திரைப்படம் கடந்த ஆண்டே ரிலீசுக்கு தயாரானது.

கொரோனா நேரத்தில் எந்த பொருளை வாங்கலாம்??? எதை வாங்கக் கூடாது??? நுகர்வோருக்கு சில ஆலோசனைகள்!!!

கொரோனா ஊரடங்கில் தேங்கியிருந்த அனைத்து உற்பத்திப் பொருள்களையும் விற்றுத் தீர்த்து விடவேண்டும் என்ற அவசரத்தில் தற்போது வணிகர்கள் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றனர்.