ஜோதிகா படத்தின் அடுத்த அதிரடி அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,April 20 2020]

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா நடித்த திரைப்படம் ’பொன்மகள் வந்தாள்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்றாலும் கொரோனா பிரச்சனை முடிந்த பின்னரே இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’வான் தூரல்கள்’ என்ற சின்மயி பாடிய பாடல் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்தது. உமாதேவியின் அசத்தலான வரிகள் இந்த பாடல் ஹிட்டாக முக்கிய காரணம். குறிப்பாக இந்த பாடலில் உள்ள

வான் தூரல்கள் வாழ்த்துக்கள் பாட
நான் மீண்டுமே பூக்கிறேன்
நீதானடி இனி நீதானடி தந்தையே வாழ்நாட்களை
தாய் நானடி தந்தை நானடி

என்ற வரிகள் யாராலும் மறக்க முடியாதது

இந்த நிலையில் ‘வான் தூரல்’ பாடலை அடுத்து இன்று மாலை 4 மணிக்கு இந்த படத்தில் இடம்பெற்ற இன்னொரு பாடலான ‘கலைகிறதே கனவே’ என்ற பாடல் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த் பாடியுள்ள இந்த பாடலும் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோதிகா, தியாகராஜன், பாக்கியராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப்போத்தன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஜேஜே பிரட்ரிக் இயக்கியுள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு பைக் பயணம் செய்த தல அஜித்!

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்த வரும் 'வலிமை' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே.

கொரோனா வார்டில் பணிபுரிந்து வீடுதிரும்பிய நர்ஸ்க்கு ஆரத்தி வரவேற்பு

கொரோனா வைரஸ் ஒரு பக்கம் மிக வேகமாக பரவி வரும் நிலையில், அந்த கொரோனா வைரசை கட்டுப்படுத்தி அதிலிருந்து மக்களை காப்பதற்காக தங்கள் உயிரை பணயம் வைத்து மருத்துவர்கள்,

கொரோனா விடுமுறையில் 'கொலகொலயாய் முந்திரிக்காய்' விளையாடிய பிரபலம்

கொரோனா விடுமுறை காரணமாக திரைப்பட படப்பிடிப்பு மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்பு இல்லாத காரணத்தால் திரையுலகினர் மற்றும் தொலைக்காட்சி பிரபலங்கள் அனைவரும் வீட்டில் சும்மா இருக்கின்றனர்.

100ஐ நெருங்கும் ராயபுரம், நெருங்க முடியாத மணலி, அம்பத்தூர்: சென்னை கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கொரோனா வைரசால் நேற்று மட்டும் 105 பேர் பாதிக்கப்பட்டனர் என்பதும் அதில் சென்னையில் மட்டும் 50 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார்கள்

கனடாவில் துப்பாகி சூடு நடத்திய மர்ம நபர்: பெண் போலீஸ் அதிகாரி உள்பட 16 பேர் பலி

கனடாவில் போலீஸ் காரில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பெண் போலீஸ் அதிகாரி உள்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.