ஜோதிகாவின் 'நாச்சியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,January 22 2018]

ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடிப்பில் பிரபல இயக்குனர் பாலா இயக்கிய 'நாச்சியார்' திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

ஏற்கனவே இந்த படம் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இந்த படம் பிப்ரவரி 16ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது.

சென்சாரில்  'UA' சான்றிதழ் பெற்ற இந்த படத்தில் ஜோதிகா முரட்டுத்தனமான காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஜிவி பிரகாஷ், ராக்லைன் வெங்கடேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஈஸ்வர் ஒளிப்பதிவும், சதீஷ் சூர்யா படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தை பாலாவின் 'B ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.