ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடும் ஜோதிகா

  • IndiaGlitz, [Friday,August 03 2018]

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேரள பெண் ஷெரில், ஜிமிக்கி கம்மல் என்ற பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ தென்னிந்தியாவையே பரபரப்புக்கு உள்ளானது. குறிப்பாக தமிழக இளைஞர்களின் கனவுக்கன்னியாகவே ஷெரில் மாறிவிட்டார். அவருக்கு தமிழ் இயக்குனர்கள் பட வாய்ப்பையும் வழங்க தயாரான நிலையில் திடீரென ஷெரிலின் திருமண அறிவிப்பு வெளியானது

இந்த நிலையில் ஷெரில் ஆடிய ஜிமிக்கி கம்மல் என்ற பாடல் தமிழகம், கேரளா மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நிலையில் இந்த பாடல் தற்போது ஜோதிகா நடித்து வரும் 'காற்றின் மொழி' படத்தில் இடம்பெறுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

எஃப் எம் வானொலியில் பணிபுரியும் கேரக்டரில் நடித்து வரும் ஜோதிகா, வானொலி நிலையத்தில் நடைபெறும் ஒரு பார்ட்டியில் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஜோதிகா நடனம் ஆடுவதாக ஒரு காட்சி 'காற்றின் மொழி' படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. 

'துமாரி சூளு' என்ற பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தில் ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு, உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ஏ.எச்.காசிஃப் இசையில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் ப்ரவீண் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை தனஞ்செயன் தயாரித்துள்ளார்.
 

More News

ஜி.வி.பிரகாஷூக்காக காத்திருக்கும் 'ஜெயில்'

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரும் பிரபல இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வரும் நிலையில்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்வாதிகாரி டாஸ்க்: கமல் மீது போலீஸ் புகார்

பிக்பாஸ் நிகழ்ச்சி பார்வையாளர்களின் ஆதரவை பெற முடியாமல் திணறி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் இடம்பெற்ற சர்வாதிகாரி டாஸ்க்கால் பார்வையாளர்களின் உச்சகட்ட வெறுப்புக்கு உள்ளானது

ஐஸ்வர்யாவை சரமாரியாக திட்டிய பிரபல நடிகர்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களுக்கும் மேல் சுவாரஸ்யம் இல்லாமலும் விறுவிறுப்பு இல்லாமலும் சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது இரண்டு நாட்களாக டென்ஷனை அதிகரிக்கும்

கருணாநிதி உடல்நிலை குறித்து நடிகை ஓவியா?

சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆறு நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலையில்

நான் அந்த இடத்தில் இருந்திருந்தால்? ஐஸ்வர்யாவின் அட்டகாசம் குறித்து நித்யா

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக சர்வாதிகாரி ராணி என்ற பெயரில் நடக்கும் அருவருக்கத்தக்க சம்பவங்களால் பிக்பாஸ் ரசிகர்கள் கொதித்து போய் உள்ளனர்