கார்த்தி-ஜோதிகா நடிக்கும் படத்தின் முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Sunday,April 14 2019]

நடிகர் கார்த்தியும் அவருடைய அண்ணி ஜோதிகாவும் ஒரே படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர் என்பதையும் இந்த படத்தை 'த்ரிஷ்யம்' பட இயக்குனர் ஜித்து ஜோசப் இயக்கவுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் கார்த்தியும் ஜோதிகாவும் உடன்பிறந்த சகோதர, சகோதரியாக நடிப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த தகவலால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜோதிகாவின் சகோதரர் சுராஜ் இந்த படத்தை தயாரிக்கின்றார். இவர் இயக்குனர் பிரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கார்த்தி தற்போது 'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் ஜோதிகா தற்போது 'குலேபகாவலி' இயக்குனர் கண்ணன் படத்தில் நடித்து வருகிறார். இருவரும் தங்களது படத்தை முடித்தபின்னர் ஜித்துஜோசப் படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

ரிலீஸ் தேதி குறித்து 'கடாரம் கொண்டான்' படக்குழுவினர் விளக்கம்

விக்ரம், ஸ்ருதிஹாசன் நடிப்பில் எம்.ராஜேஷ் செல்வா இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான 'கடாரம் கொண்டான்' திரைப்படம் வரும் மே 31ஆம் தேதி வெளியாகும்

தேர்தல் பிரச்சார களத்தில் விஜயகாந்த்! தொண்டர்கள் உற்சாகம்

அதிமுக கூட்டணியில் ஒருசில சர்ச்சைகளுக்கு பின் இணைந்த தேமுதிக, அக்கூட்டணியிடம் கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர், வடசென்னை ஆகிய நான்கு தொகுதிகளை பெற்றது.

தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தமிழர்கள் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகையின்போதும் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழர்களுக்கு வாழ்த்து கூறுவதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே

Mr.லோக்கல் டிரைலர்-ஆடியோ ரிலீஸ் தேதி !

நடிகர் சிவகார்த்திகேயனும், லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாராவும் மீண்டும் இணைந்து நடித்த 'Mr.லோக்கல்' திரைப்படம் வரும் மே மாதம் 1ஆம் தேதி வெளியாகவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே

'கடாரம் கொண்டான்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விக்ரம், அக்சராஹாசன் நடிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் உருவாகி வரும் 'கடாரம் கொண்டான்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில்