செக்க சிவந்த வானம்: ஜோதிகாவின் கேரக்டர் அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,August 16 2018]

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள 'செக்க சிவந்த வானம்' படத்தில் நடித்த பிரபல நடிகர்களின் கேரக்டர்கள் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் குறித்த அறிவிப்புகள் கடந்த மூன்று நாட்களாக வெளியாகி வருகிறது.

இதில் அரவிந்தசாமி, 'வரதன்' என்ற கேரக்டரிலும், அருண்விஜய் 'தியாகு' என்ற கேரக்டரிலும், விஜய்சேதுபதி 'ரசூல்' என்ற கேரக்டரிலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஜோதிகாவின் கேரக்டர் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது. ஜோதிகா இந்த படத்தில் 'சுமதி' என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இன்னும் சிம்பு, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதிராவ் ஹைத்ரி ஆகியோர்களின் கேரக்டர்கள் குறித்த அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதிராவ் ஹைத்ரி, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

More News

விருதுகளை அள்ள காத்திருக்கும் விஜய்யின் 'மெர்சல்'

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியான 'மெர்சல்' திரைப்படம் ஏற்கனவே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு

அமலாபால் நடிக்கும் அடுத்த பட இயக்குனர் மற்றும் டைட்டில் அறிவிப்பு

இயக்குனர் ரத்னகுமார் .தனது முதல் படத்திலேயே திறமை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த இவர்தான் அமலாபால் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவுள்ளார்.

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கும் அஜித்-விஜய் இயக்குனர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்க கோலிவுட் திரையுலகில் பலர் முயற்சித்து வந்த நிலையில் தற்போது இயக்குனர் விஜய்,

கட்டணம் கட்டினால் ரஜினிக்கு பாடம் எடுக்க தயார்? அமைச்சர் ஜெயகுமார்

சமீபத்தில் நடந்த கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'அதிமுகவினர் எம்ஜிஆர் படத்தின் அருகே கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்

மகத்தின் மோசடி விளையாட்டு: ஐஸ்வர்யா ஆவேசம் அடையாதது ஏன்?

பிக்பாஸ் தனது போட்டியாளர்களுக்கு கொடுக்கும் டாஸ்க்குகள் அனைத்துமே சிறுபிள்ளைத்தனமாகவும், முட்டாள்த்தனமாகவும் இருப்பதாக ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்து வருகிறது.