மீண்டும் போலீஸ் கேரக்டரில் ஜோதிகா!

  • IndiaGlitz, [Tuesday,April 30 2019]

நடிகை ஜோதிகா நடிப்பில் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்திற்கு 'ஜாக்பாட்' என்ற டைட்டில் வைக்கப்பட்டு அதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்களும் வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் ஜோதிகாவும் ரேவதியும் போலீஸ் உடையில் இருப்பதால் இருவரும் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜோதிகா சமீபத்தில் வெளியான 'நாச்சியார்' படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே.

ஜோதிகா, ரேவதி,யோகிபாபு, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் அனந்தகுமார் ஒளிப்பதிவில் விஷால் சந்திரசேகர் இசையில் உருவாகியுள்ளது.