ரூ.750 கோடி கொரோனா தடுப்பு நிதி கொடுத்த பிரபல விளையாட்டு வீரர்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகப்புகழ் பெற்ற முன்னணி கால்பந்து வீரரான கிறிஸ்டியோனோ ரொனால்டோ கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக இந்திய மதிப்பில் சுமார் 750 கோடி நிதியளித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
உலகிலேயே விளையாட்டுத்துறையின் அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியோனோ ரொனால்டோ. இவர் தற்போது உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகமாகியிருப்பதை அடுத்து, கொரோனா தடுப்பு நிதியாக தனது சார்பிலும் தனது அணி மற்றும் பயிற்சியாளர் சார்பிலும் $100 மில்லியன் டாலர் நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளார். இந்த பணம் இந்திய மதிப்பில் சுமார் 750 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தொகை ரொனோல்டோ விளையாடி வரும் ஜூவெண்டஸ் அணியினர்களின் நான்கு மாத சம்பளம் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்தியாவில் டாடா நிறுவனம் கொரோனா தடுப்பு நிதியாக ரூ.1500 கோடி நிதியளித்துள்ளது என்றாலும் விளையாட்டு துறையில் ஒரே ஒரு அணி மட்டும் கொடுத்துள்ள தொகை ரூ.750 என்பது மிகப்பெரிய தொகையாக கருதப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments