மும்பையில் உலகப்புகழ் பெற்ற பாப் பாடகரின் இசை நிகழ்ச்சி

  • IndiaGlitz, [Wednesday,May 10 2017]

கனடாவை சேர்ந்த பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் உலகப்புகழ் பெற்றவர். 21வயதிலேயே உலகின் பல நாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சி நடத்தி மில்லியன் கணக்கான டாலர் சம்பாதித்துள்ளார். போர்ப்ஸ் நிறுவனத்தின் உலகின் சக்திவாய்ந்த செலிபிரிட்டிஸ் பட்டியலில் நான்கு முறை முதல் பத்து இடங்களில் இடம்பெற்றவர்.
இந்த நிலையில் உலகப்ப்புகழ் பெற்ற பாடகர் ஜஸ்டின் பீபர், முதன்முதலாக இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக இந்தியா வந்துள்ளார். நேற்றிரவு மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரபல நடிகர் சல்மான்கான் அவர்களின் பாதுகாவலர் 'ஷெரா' அவர்கள் ஜஸ்டினின் பாதுகாப்பு பணியை ஏற்றுள்ளார்.
இன்று மாலை 4 மணிக்கு மும்பை டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியத்தில், ஜஸ்டின் பீபரின் முதல் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த இசை நிகழ்ச்சியின் ஆரம்பநிலை டிக்கெட் 4,000 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையை அடுத்து டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் ஆக்ரா ஆகிய நகரங்களிலும் ஜஸ்டின் பீபர் இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.