கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை. சுப்ரீம் கோர்ட் அதிரடி
- IndiaGlitz, [Tuesday,May 09 2017]
கடந்த சில மாதங்களாக முன்னாள் சென்னை ஐகோர்ட் நீதிபதியும், இந்நாள் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதியுமான கர்ணன் அவர்களுக்கும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்து வருகிறது. பல்வேறு நீதிபதிகள் மீது ஊழல் புகார் தெரிவித்த நீதிபதி கர்ணன் மீது சுப்ரீம் கோர்ட் வழக்குப்பதிவு செய்ததோடு, அவருக்கு மனநல சோதனை செய்யவும் உத்தரவிட்டது.
ஆனால் மனநல சோதனைக்கு சம்மதிக்காத நீதிபதி கர்ணன், சுப்ரீம் கோர்ட்டின் 7 நீதிபதிகளுக்கும் மனநல சோதனை செய்ய உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று அவர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார்.
இந்த நிலையில் மனநல சோதனைக்கு ஒத்துழைப்பு தராதது, மற்றும் நிதிமன்ற அவமதிப்பு ஆகியவற்றுக்காக நீதிபதி கர்ணன் அவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட் சற்றுமுன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய மக்கள் அனைவருமே பெரும் நம்பிக்கை வைத்திருக்கும் நீதிபதிகள் மாறி மாறி தங்களுக்குள்ளாகவே சிறைத்தண்டனை விதித்து பிறப்பிக்கும் உத்தரவுகள் நீதித்துறையையே கேலிக்குரியாக்குவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.