சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கேட்டார் நீதிபதி கர்ணன்

  • IndiaGlitz, [Thursday,May 11 2017]

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை கைது செய்து ஆறு மாதங்கள் சிறையில் அடைக்க சுப்ரீ கோர்ட் நேற்று முன் தினம் உத்தரவிட்டதை அடுத்து, நீதிபதி கர்ணன் தலைமறைவானதாக கூறப்பட்டது. அவரை தமிழக, ஆந்திரா, கொல்கத்தா போலீசார் வலைவீசி தேடி வரும் நிலையில் இன்று காலை அவரது வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் நீதிபதி கர்ணன், குடியரசு தலைவரை சந்திக்க இருப்பதாகவும், அவரது தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி கர்ணன் மன்னிப்பு கேட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நீதிபதி கர்ணன் தனது வழக்கரிஞர் நெடுமாறப்பா மூலம் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கேட்டுள்ளதாகவும், அவரது மன்னிப்பை ஏற்று, தண்டனையை திரும்ப பெறும் கோரிக்கை குறித்து பரிசிலீப்பதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பதிலளித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
நீதிபதி கர்ணன் மன்னிப்பு கேட்டதை அடுத்து, இந்த பிரச்சனை வெகுவிரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.