கமல்ஹாசனை அடுத்து நந்தினிக்காக குரல் கொடுத்த திரையுலக பிரமுகர்கள்

  • IndiaGlitz, [Sunday,February 05 2017]

சமீபத்தில் அரியலூர் அருகே நந்தினி என்ற 17 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில் நந்தினி கொலைக்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று நேற்று நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். அவரது பதிவிற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் கமல்ஹாசனை தொடர்ந்து தற்போது கோலிவுட் திரையுலகின் மேலும் இரண்டு பிரமுகர்கள் நந்தினிக்காக குரல் கொடுத்துள்ளனர். இந்த இருவரும் ஏற்கனவே ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தங்கள் பெரும் ஆதரவை கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் ஜி.வி.பிரகாஷ் மற்றும் ராகவா லாரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

நந்தினிக்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்று ஜி.வி.பிரகாஷும், 'இத்தகைய காட்டுமிராண்டித் தனமான நடவடிக்கைகளை கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கண்டிப்பாக நீதி வழங்கப்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி உள்பட பலர் இந்த அரக்கத்தனமான செயலுக்கு கண்டனங்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.