மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டொனால்ட் டிரம்ப்… ஆவணங்களைத் திருடியதாக வழக்கு!

  • IndiaGlitz, [Friday,June 09 2023]

2016 தேர்தல் தோல்விக்குப் பிறகு முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல அடுக்கடுக்கான குற்ற வழக்குகளில் சிக்கி வருகிறார். இந்நிலையில் தற்போது அரசின் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக 7 குற்றச்சாட்டுகள் அவர்மீது பதிவு செய்யப்பட்டு இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்டு இரண்டு முறை அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் கடந்த 2016 தேர்தலில் படு தோல்வியடைந்தார். இதையடுத்து அவர் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளும் புகார்களும் தொடர்ந்து வருகின்றன. அதிலும் ஆபாச நடிகை ஒருவருடன் இருந்த தொடர்பை மறைப்பதற்காக தேர்தல் நிதியில் இருந்து லஞ்சம் கொடுத்ததாக மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்குத் தொடரப்பட்டு பின்னர் 5 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதுதொடர்பாக மேல் முறையீடு டிரம்ப் மேல்முறையீடு செய்துள்ளார்.

அதேபோல பத்திரிக்கையாளர் ஜீன் கரோலை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்றும் வழக்குத் தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து டிரம்ப் அமெரிக்க வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய போது அரசின் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக 7 புதிய குற்றச்சாட்டுகள் மியாமி நீதிமன்றத்தில் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையை காலி செய்தபோதே அரசின் ஆவணங்களை எடுத்துச் சென்றார் என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவருடைய புளோரிடா வீட்டில் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் மியாமி நீதிமன்றத்தில் 7 குற்றச்சாட்டுகள் புதிதாக பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் இந்த வழக்கிற்கான நகல் எதுவும் தன்னிடம் கொடுக்கப்பட வில்லை என்று டிரம்ப் வழக்கறிஞர்கள் கூறிவரும் நிலையில் வரும் செவ்வாய்கிழமை இந்த வழக்குத் தொர்பாக டொனால்ட் டிரம்ப் நீதிமன்றத்தில் ஆஜர்-ஆக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசின் முக்கிய ஆவணங்கள் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள இந்த வழக்குத் தொடர்பாக டிரம்ப் மீது பல கட்ட விசாரணைகள் நடத்தப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில் ஒருவேளை அதுதொடர்பான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 100 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என்றும் தகவல்கள் கூறப்படுகின்றன.