கைது உத்தரவு எதிரொலி: நீதிபதி கர்ணன் தலைமறைவா?

  • IndiaGlitz, [Wednesday,May 10 2017]

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் அவர்களுக்கு மனநல சோதனை செய்யுமாறு சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவுக்கு நீதிபதி கர்ணன் ஒத்துழைப்பு தர மறுத்ததை அடுத்து அவரை கைது செய்து ஆறு மாதங்கள் சிறையில் அடைக்க நேற்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

நீதிபதி கர்ணன் தற்போது சென்னையில் இருப்பதை அடுத்து இன்று காலை கொல்கத்தா போலிசார் சென்னைக்கு கிளம்பினர். இந்த நிலையில் சென்னை க்ரீன்வேஸ் சாலையில் நேற்று இரவு முதல் தங்கியிருந்த நீதிபதி கர்ணன் திடீரென காணவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து நடந்த விசாரணையில் நீதிபதி கர்ணன் தன்னுடைய காரில் வெளியே சென்றதாக வீட்டின் காவலர்கள் கூறியுள்ளனர். நீதிபதி கர்ணன் தலைமறைவாகிவிட்டாரா? அல்லது சரண் அடைய சென்றாரா? என்பது குறித்து தெரியவில்லை.

இந்திய நீதித்துறை சரித்திரத்தில் இதுவரை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு கைது உத்தரவு பிறப்பிக்கப்படுவதும், பின்னர் அவர் தலைமறைவாகி இருப்பதும் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.