3D கண்ணாடி ஆர்டர் பண்ணிட்டேன்: விஜய்சங்கரை கிண்டல் செய்தாரா அம்பத்தி ராயுடு?
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் விராத் கோஹ்லி, தோனி, ரோஹித்சர்மா ஆகியோர்களுக்கு அடுத்தபடியாக அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள அம்பத்தி ராயுடுவுக்கு அணியில் இடம் கிடைக்காதது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. 4வது பேட்ஸ்மேன் இடத்திற்கு அதிக கடும் போட்டி இருந்தாலும் அம்பத்தி ராயுடு தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருந்ததாகவே கருதப்பட்டது. ஆனால் அந்த இடத்திற்கு விஜய்சங்கர் தேர்வு செய்யப்பட்டார்.
'ஐபிஎல் போட்டியில் விளையாடும் தன்மையை கணக்கில் எடுத்து கொள்ளப்பட மாட்டாது என்றும், அம்பத்தி ராயுடுவுக்கு ஒருசில வாய்ப்புகள் கொடுத்தோம். இருப்பினும் 4வது இடத்திற்கு விஜய்சங்கர் பெயர் ஆலோசிக்கப்பட்டது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என முப்பரிணாமங்களில் விஜய்சங்கர் சிறந்து விளங்குவதால் அவர் தேர்வு செய்யப்பட்டார்' என தேர்வுக்குழுவினர் தெரிவித்தனர்.
முப்பரிணாமங்களில் சிறந்தவர் விஜய்சங்கர் என்று கூறியதை குறிப்பிடும் வகையில் அம்பத்தி ராயுடு தனது சமூக வலைத்தளத்தில், 'உலகக்கோப்பையை பார்க்க 3D கண்ணடிகள் ஆர்டர் செய்துள்ளேன்' என்று கிண்டலாக பதிவு செய்துள்ளார். ராயுடுவின் இந்த பதிவிற்கு கிரிக்கெட் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Just Ordered a new set of 3d glasses to watch the world cup ????..
— Ambati Rayudu (@RayuduAmbati) April 16, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments