'ஜூராசிக் வேர்ல்ட் 3' படத்தின் டைட்டில், இயக்குனர், ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஹாலிவுட்டில் கடந்த 1993 ஆம் ஆண்டு தயாரான ’ஜுராசிக் பார்க்’ என்ற திரைப்படம் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளிவந்து அனைவரையும் அதிர வைத்தது. டைனோசர் மிருகங்களை முதன்முதலாக ஸ்கிரீனில் பார்த்த ரசிகர்கள் மிரண்டு விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு தத்ரூபமாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது. வசூலிலும் இந்தப்படம் மிகப்பெரிய சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஜுராசிக் பார்க்’ படத்தின் இரண்டாம் பாகம் 1997ஆம் ஆண்டும் மூன்றாம் பாகம் 2001 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதனை அடுத்து ஜூராசிக் பார்க்’ பட வரிசை நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ’ஜுராசிக் வேர்ல்ட்’ படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளி வந்தது. அதனை அடுத்து 2018ஆம் ஆண்டு ’ஜுராசிக் வேர்ல்ட் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்து உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஜுராசிக் வேர்ல்ட்’ படத்தின் மூன்றாம் பாகம் விரைவில் தயாராக இருப்பதாகவும் இந்த படத்தின் இயக்குனர் கோலின் ட்ரவாரோ’ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு குறித்த புகைப்படத்தை இயக்குனர் கோலின் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் இந்த படத்திற்கு ’ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் 2021 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி இந்த படம் வெளிவரும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜுராசிக் வேர்ல்ட் படத்தில் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் மூன்றாம் வகுப்பிலும் நடிப்பார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

ரஜினியின் பேட்டிக்கு வந்த முதல் எதிர்ப்பு!

பொதுவாக ரஜினிகாந்த் பேட்டி அளித்தாலோ, அல்லது ஒரு மேடையில் பேசினாலோ அல்லது ஒரு கருத்தை தெரிவித்தாலோ உடனடியாக தமிழக அரசியல்வாதிகள் ரியாக்சன் செய்வது வழக்கமான ஒன்றாக

நம்பிக்கை கொடுங்கள், நன்மை விளையும்: டெல்லி வன்முறை குறித்து வைரமுத்து!

டெல்லியில் கடந்த சில நாட்களாக சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 34 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் நூற்றுக்கும் அதிகமானோர்

'மாஸ்டர்' நடிகரை மிரட்டிய விஜய் ரசிகர்: டுவிட்டரில் பரபரப்பு

விஜய், அஜித், சூர்யா போன்ற மாஸ் நடிகர்களின் படங்களை தயாரிப்பவர்களுக்கு தயாரிப்பு பணி ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் அந்த படங்கள் குறித்து அப்டேட்டை ரசிகர்களுக்கு

ரஜினிகாந்த்தை சந்தித்து CAA போராட்டத்தின் நியாயம் குறித்து விளக்க முஸ்லீம்கள் முடிவு..!

ரஜினியின் கருத்துக்கள் அதிர்ப்தியளிப்பதாகவும், பெரும்பான்மை மக்களின் கருத்துக்களில் உள்ள நியாயத்தை அவர் புரிந்துகொள்ளவில்லை என அன்வர் பாதுஷாஹ் உலவி,ரஜினிக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். 

ஒருவழியாக ஜப்பான் கப்பலில் சிக்கித் தவித்த இந்தியர்கள் தயாகம் திரும்பினர்

ஜப்பானுக்குச் சொந்தமான டைமண்ட் பிரின்சன்ஸ் கப்பல் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி ஹாங்காங்கில் இருந்து ஜப்பானின் யோகிஹோமா துறைமுகத்தில்