ஜூராஸிக் வேர்ல்ட் படத்தின் சென்னை வசூல்

  • IndiaGlitz, [Monday,June 11 2018]

ஜூராஸிக் பார்க் படங்களின் அனைத்து பாகங்களும் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் அடுத்த பாகமான 'ஜூராஸிக் வேர்ல்ட்' திரைப்படம் கடந்த 7ஆம் தேதி வெளியாது. இந்த படம் தமிழகத்தில் தமிழ் மொழியில் வெளியாகி குழந்தைகள் உள்பட அனைவரையும் கவர்ந்தது.

இந்த படம் சென்னையில் கடந்த வாரயிறுதி நாட்களில் 12 திரையரங்க வளாகங்களில் 135 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.50,42,174 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் இந்த படத்திற்கு 95% பார்வையாளர்கள் இருந்தானர் என்பதே இந்த படத்தின் வெற்றிக்கு சான்றாக உள்ளது.

மேலும் இந்த படம் சென்னையில் கடந்த 7ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான 4 நாட்களில் ரூ.64,68,321 வசூல் செய்து ஹாலிவுட் படங்களில் நல்ல வசூலை பெற்ற படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.