'ஆர்.ஆர்.ஆர்' படம் பார்க்க ரூ.3,57,268 செலவு செய்த ஜூனியர் என்.டி.ஆர் மனைவி!

  • IndiaGlitz, [Sunday,October 23 2022]

’ஆர்.ஆர்.ஆர்’ படம் பார்க்க ஜூனியர் என்டிஆர் மனைவி ரூ.3,57,268 செலவு செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த படம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் உலகம் முழுவதும் வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் சமீபத்தில் ஜப்பானில் வெளியானது. இதனை அடுத்து படக்குழுவினர் ஜப்பான் நாட்டிற்குச் சென்று இந்த படத்தை புரமோஷன் செய்தனர் என்பதும் ரசிகர்களுடன் திரையரங்கில் படம் பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜப்பான் நாட்டில் தனது கணவர் ஜூனியர் என்டிஆர் உடன் ’ஆர்.ஆர்.ஆர்’ படம் பார்க்க சென்று அவருடைய மனைவி லட்சுமி ஆடம்பரமான உடையை அணிந்து சென்றதாகவும் அந்த உடையின் மதிப்பு மட்டும் ரூ.3,57,268 என்றும் கூறப்படுகிறது.

இந்த விலை மிகுந்த உடையுடன் ஜூனியர் என்டிஆர் உடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.